இது கொஞ்சம் வித்தியாசமானது என்னவென்றால் பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களின் சிறு வயது பிராயத்தில் தங்கள் வாழ்வில் வருமையை சந்தித்து அதன் பொருட்டு பல இன்னல்களை அனுபவித்து இருப்பர். அதன் காரணமாக அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்க ஆசை படுவர். எனவே தங்கள் பிள்ளைகளுக்கு வருமையின் சுவடு தெரியாமல் வளர்ப்பர். இது தான் பின்னர் பிள்ளைகள் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடும் கதவு. ஆம் இதுதான் உண்மை. அந்த பிள்ளைகள் பணத்தின் மதிப்பு அவர்களுக்கு புரிவதில்லை. நினைத்த விக்ஷயஙகளை நினைத்த வேகத்தில் எவ்வளவு பெரிய செலவுக்குட்பட்டதாக இருந்தாலும் தந்தை செய்வார் தாய் செய்வார் என்ற எண்ணத்தில் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். நாளடைவில் அவர்கள் எத்தனை பெரிய செலவானாலும் வெகு சுலபமாக செய்ய முடியும் என்ற எண்ணத்திலேயே வாழ்கின்றனர்.இது தான் அவர்கள் வளர்ந்தவுடன அவர்களை மிகுந்த அதிக சிரமத்திற்கு உண்டாக்குகிறது எனவே பெற்றவர்கள் தான் இதற்குமுழுப்பொருப்பாவார்கள். எனவே பெற்றோர்கள் சிறுபிராயத்திலேயே குழந்தைகளுக்கு நல்ல சிந்தனையை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.பணத்தின் அருமை என்ன வென்று புரிய வைக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்றால் எந்த பொருளை பிள்ளைகள் கேட்டாலுமஉடனே வாங்கி கொடுத்து பழகக் கூடாது. அதற்கு பதிலாக அவர் களுக்கு அந்த பொருள் அவர்களுக்கு தேவையானதுதானா என்று புரிய வைக்க வேண்டும். தேவையானது என்று கருதினால் மட்டுமே வாங்கி கொடுக்க வேண்டும். இல்லையேல் வாங்கி கொடுக்காமலும் விட்டு விட வேண்டும்.
Humanity!
Wednesday, 27 March 2019
Monday, 25 March 2019
மக்கள் நல்வாழ்வை விரும்பினால் முதலில் மனிதன் தன்னை அறிய வேண்டும். எப்படி என்றால் நாடுமுழுவதும் நீர் வளம் பெறுக ஒரு தனிமனிதனின் முயற்சி பெரிய அளவில் இருக்க வேண்டும். அதற்கு அவன் முழு மூச்சாக மரம் வளர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நன்பர்களுடன் சேர்ந்து நாடு முழுவதும் மரம் நட்டு அதை பராமரிக்க வேண்டும். அரசு இலவசமாக வழங்கும் மரக்கன்று களை சேகரித்து சாலை ஓரங்களில் ஒரு குழுவாக சேர்ந்து நட்டு வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் சாலை ஓரங்களில் மரங்களின் தோற்றம் பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கும். அதுமட்டுமின்றி சாலையில் வெயிலின் தாக்கம் தெரியாது. இதையும் தாண்டி ஒன்று உள்ளது அது என்ன தெரியுமா? அதுதான் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மழை. ஆம் மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்களில் மழை பொழிந்திருக்கும். மழை பொழிந்தால் நிலத்தடிநீர் பெருகும். நிலத்தடி நீர் பெருகினால் பூமி குளிர்ச்சி அடையும். நீர் வளம் பெருகும். அதன் பொருட்டு நம் நாட்டின் விவசாயம் பெருகும். இப்பொழுது சிந்தியுங்கள் ஒரு தனிமனிதனின் முயற்சி ஒரு நாட்டின் வளர்ச்சி இல்லையா! ஆம் மரம் வளர்ப்போம் மழை பெருவோம்.
Wednesday, 16 May 2018
புரியாத புதிர்
என்ன சொல்வது திருமண வாழ்வில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தால் அக்குடும்பம் நிச்சயமாக ஒரு பல்கலைக்கழகம் தான். இல்லை என்றால் அது புரியாத புதிர்தான்.
தனி மனித சுய சிந்தனை
இப்போதைய நாட்களில் வெப்பம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இரவில் தூங்குவது என்பது கேள்வி க்குறியாகவே இருக்கிறது. இந்த நேரத்தில்தான் ஒவ்வொருத்தரும் தன் சிந்தனையை வளர்க்க வேண்டும். எப்படியென்றால் வெப்பம் தணிய வேண்டும். எப்படி தணியும்"நீராதாரம்" வேண்டும். என்ன செய்யலாம். யோசித்துப் பார்த்தால் நமக்குள்ளேயே ஒரு தீர்வைக் காணலாம். அதுதான்இயற்கை நமக்களித்த பொக்கிஷம் " மழை" அது தரும் நீரை நாம் அப்படியே நமக்குரிய தாக மாற்றவேண்டும். அதற்கு அவன் என்னசெய்யலாம் என்றால் முதலில் தன்னுடைய வீட்டுப் பகுதியில் ஒரு மூலைப் பகுதியை தேர்ந்தெடுத்து அது தோட்டப் பகுதியாக இருந்தால் ஒரு பத்து அடி நீளம் உள்ள குழாயில் துளையிட்டு அதை அப்படியே மண்ணில் நன்கு இரக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுமேயானால் மழை நீரானது பூமிக்கு அடியில் சென்று நம் வீடு குளிர்ச்சி பெறும்.முதலில் நாம் இதைச் செய்வோம் நண்பர்களே.
Wednesday, 21 February 2018
மனதின் ஆதங்கம்
ஒரு மனைவி தன் அலுவலக வேலைகளை எல்லாம் முடித்து பின்னர் தன் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் முடித்து அதன் பின்னர் சற்று நேரம் தன் கணவரிடம் சிறிது நேரம் அன்றைய நாளின் நிகழ்வு களை பரிமாறிக் கொள்ள நினைக்கும் தருணத்தில் அதை கணவன் புறக்கணித்து சென்றால் அந்தபெண்ணின் மனம் படும் பாடு பரிதாபத்துக்குரிய தாகும் அல்லவா! இது தான் இன்றைய பெண்களின் நிலை. இதை கணவன் மார்கள் சற்று புரிந்து தங்கள் செய்கையை மாற்றிக் கொள்ள முற்பட்டால் அதுவும் மனித நேயம் தான் அல்லவா.
Tuesday, 20 February 2018
சிந்தனை துளிகள்
ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது நம்மை விட ப்பெ ரியவகளின்ஆலோசனை பெற்று செய்தோமானால் அச்செயல் மிக சரியானதாக அமையும்.
Subscribe to:
Posts (Atom)