Wednesday, 27 March 2019

இது கொஞ்சம் வித்தியாசமானது என்னவென்றால் பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களின் சிறு வயது பிராயத்தில் தங்கள்  வாழ்வில் வருமையை சந்தித்து அதன் பொருட்டு பல இன்னல்களை அனுபவித்து இருப்பர். அதன் காரணமாக அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்க ஆசை படுவர். எனவே தங்கள் பிள்ளைகளுக்கு வருமையின் சுவடு தெரியாமல் வளர்ப்பர். இது தான் பின்னர் பிள்ளைகள் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடும் கதவு. ஆம் இதுதான் உண்மை. அந்த பிள்ளைகள் பணத்தின் மதிப்பு அவர்களுக்கு புரிவதில்லை. நினைத்த விக்ஷயஙகளை நினைத்த வேகத்தில் எவ்வளவு பெரிய செலவுக்குட்பட்டதாக இருந்தாலும் தந்தை செய்வார் தாய் செய்வார் என்ற எண்ணத்தில் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.   நாளடைவில் அவர்கள் எத்தனை பெரிய செலவானாலும் வெகு சுலபமாக செய்ய முடியும் என்ற எண்ணத்திலேயே வாழ்கின்றனர்.இது தான் அவர்கள் வளர்ந்தவுடன அவர்களை மிகுந்த அதிக சிரமத்திற்கு உண்டாக்குகிறது எனவே பெற்றவர்கள் தான் இதற்குமுழுப்பொருப்பாவார்கள். எனவே பெற்றோர்கள் சிறுபிராயத்திலேயே குழந்தைகளுக்கு நல்ல சிந்தனையை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.பணத்தின் அருமை என்ன வென்று புரிய வைக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்றால்  எந்த பொருளை பிள்ளைகள் கேட்டாலுமஉடனே வாங்கி கொடுத்து பழகக் கூடாது.   அதற்கு பதிலாக அவர் களுக்கு அந்த பொருள் அவர்களுக்கு தேவையானதுதானா என்று புரிய வைக்க வேண்டும். தேவையானது என்று கருதினால் மட்டுமே வாங்கி கொடுக்க வேண்டும். இல்லையேல் வாங்கி கொடுக்காமலும் விட்டு விட வேண்டும்.

No comments:

Post a Comment