மக்கள் நல்வாழ்வை விரும்பினால் முதலில் மனிதன் தன்னை அறிய வேண்டும். எப்படி என்றால் நாடுமுழுவதும் நீர் வளம் பெறுக ஒரு தனிமனிதனின் முயற்சி பெரிய அளவில் இருக்க வேண்டும். அதற்கு அவன் முழு மூச்சாக மரம் வளர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நன்பர்களுடன் சேர்ந்து நாடு முழுவதும் மரம் நட்டு அதை பராமரிக்க வேண்டும். அரசு இலவசமாக வழங்கும் மரக்கன்று களை சேகரித்து சாலை ஓரங்களில் ஒரு குழுவாக சேர்ந்து நட்டு வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் சாலை ஓரங்களில் மரங்களின் தோற்றம் பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கும். அதுமட்டுமின்றி சாலையில் வெயிலின் தாக்கம் தெரியாது. இதையும் தாண்டி ஒன்று உள்ளது அது என்ன தெரியுமா? அதுதான் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மழை. ஆம் மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்களில் மழை பொழிந்திருக்கும். மழை பொழிந்தால் நிலத்தடிநீர் பெருகும். நிலத்தடி நீர் பெருகினால் பூமி குளிர்ச்சி அடையும். நீர் வளம் பெருகும். அதன் பொருட்டு நம் நாட்டின் விவசாயம் பெருகும். இப்பொழுது சிந்தியுங்கள் ஒரு தனிமனிதனின் முயற்சி ஒரு நாட்டின் வளர்ச்சி இல்லையா! ஆம் மரம் வளர்ப்போம் மழை பெருவோம்.
No comments:
Post a Comment